மிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத்

சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் ஒன்றாக வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், சிந்துபாத் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளன.

சு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை முன்னதாக திரைக்கு கொண்டு வர தற்போது படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. இதனால் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சிந்துபாத் படத்தை மே 3-ந் தேதி ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *