கமலுக்கு அரசியலுக்கு ஆதரவு கொடுக்கும் ஸ்ருதிஹாசன்

Shruti Haasan

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு அளித்துள்ள செவ்வியில், கமலின் அரசியல் பயணத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அதில் மேலும் தெரிவிக்கையில், “எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.

என ஸ்ருதிஹாசன் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *