ஜெயலலிதாவாக நடிக்க விரும்பும் மஞ்சிமா மோகன்

நடிகை மஞ்சிமா மோகன், ஜெயலலிதாக வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

சமீபத்தில் அளித்துள்ள செவ்வி ஒன்றில், “
ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை எனக்கும் பிடிக்கணும். அப்போதான், அவங்க வாழ்க்கையை என்னால சரியா பிரதிபலிக்க முடியும். கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படம்தான், மலையாளத்துல நான் நடிச்சிருக்கிற ‘ஜம் ஜம்.’ அதுல, கங்கனா பண்ணுன கேரக்டரை நடிக்கவே கஷ்டமா இருக்கு. அப்படி இருக்கிறப்போ, பயோபிக்ல நடிக்க டைம் ஆகும். மத்தபடி, எனக்கு ஜெயலலிதா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க கேரக்டர்ல நடிக்கச் சொன்னா, நான் தயார்’ என கூறியுள்ளார்.

Manjima Mohan Trending Photoshoot Video

ஜெயலலிதாவாக நடிக்க விரும்பும் மஞ்சிமா மோகன்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *